<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d7269813352951524605', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Wednesday, June 08, 2005

புத்தக மீய்ம்

மதியும், ஷங்கரும் என்னை விளையாடக் கூப்பிட்டுள்ளனர். என் பட்டியல் இங்கே :

புத்தகங்களின் எண்ணிக்கை :
400 - 500 (உமா மஹாதேவன் - தாஸ்குப்தாவோட லிஸ்ட பாருங்க அம்மாடியோவ்...)

கடைசியாக வாங்கின புத்தகங்கள் :
(நான் சீன் விடுவதற்கு சான்ஸ் கிடைத்துவிட்டது ;). அப்பாடா போனவாரம் தி.நகர் புக்லேண்டில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி என் அப்பாவிடம் வாங்கி கட்டிகொண்டது :) )

 1. கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர். ராஜம் அய்யர்
 2. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
 3. கலை உலகில் ஒரு சஞ்சாரம் - வெங்கட் சாமிநாதன்
 4. இன்றைய நாடக முயற்சிகள் - வெங்கட் சாமிநாதன்
 5. கடவு - திலீப்குமார்
 6. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
 7. நாலு மூலை - ரா.கி.ரங்கராஜன்
 8. வரி வரியாகச் சிரி - ஜே.எஸ்.ராகவன்
 9. பதி பசு பாகிஸ்தான் - எஸ்.வி.ராஜதுரை
 10. கறுக்கும் மருதாணி - கனிமொழி
 11. English August - Upamanyu Chatterjee ( இது Five point some படித்த ஹேங்கோவரில் வாங்கியது)
 12. Padmavati - A. Madhaviah (மொழிபெயர்த்தவர் : மீனாக்ஷி தியாகராஜன். தமிழில் "பத்மாவதி சரித்திரம்" கிடைக்காததால் ஆங்கில மொழிபெயர்ப்பு வாங்கவேண்டியதாயிற்று)

சமீபத்தில் படித்து முடித்த புத்தகங்கள்:
 1. இலக்கியத்துக்காக ஒரு இயக்கம் - க.நா.சு
 2. சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்
 3. டுபாக்கூர் "டா வின்ச்சி கோட்" (Da Vinci Code) - Dan Brown (பாரிஸ் லூவ்ரே மியூசித்துக்கு போகும் முன்னால், இதை படிச்சுட்டுப்போ என்று என் சகாவின் பரிந்துரையில் படித்தேன். காதுல பூ சுத்தலாம், மாலை போடறது கொஞ்சம் டூ மச்)

படித்துக் கொண்டிருப்பவை :
 1. காகித மலர்கள் - ஆதவன்
 2. Unbearable lightness of being - Milan Kundera
 3. நாலு மூலை - ரா.கி.ரங்கராஜன்
 4. Bangalore - Peter Colaco

படிக்க வேண்டும் என்று விழைபவை (அதாவது இன்னும் வாங்கவில்லை) :
 1. ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர. ராமசாமி
 2. மௌனியின் கதைகள்
 3. மோகமுள் - தி.ஜானகிராமன்
 4. புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு - தொ.மு.சிதம்பர ரகுநாதன்
 5. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
 6. பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்
 7. Dance of Shiva - Ananda Coomaraswamy
 8. Introduction to Indian Art - Ananda Coomaraswamy
 9. Nataraja in Art, Thought and Literature - C.Sivaramurthy
 10. Foucault's Pendulum - Umberto Eco

மிகவும் பிடித்தவை (Books That Mean a Lot to Me):
 1. பாரதியார் கதைகள்
 2. புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
 3. ஸ்ரீரங்கத்து கதைகள் - சுஜாதா
 4. என் பெயர் ராமசேஷன் - ஆதவன் (முதல் ஐம்பது பக்கம், மாம்பழத்தில் வண்டு வகையறா புத்தகமா என்று எண்ண வைத்து இறுதியில் எங்கோ ஒரு உயரத்துக்கு போன புத்தகம்)
 5. திரைஉலகில் - வெங்கட் சாமிநாதன்
 6. Swami and Friends - R.K.Narayan
 7. The Curious Incident of the Dog in the Night-Time - Mark Haddon
 8. Freedom at Midnight - Larry Collins, Dominique Lapierre

பிடித்தவை:
 1. காக்டெயில் - சுதேசமித்திரன்
 2. Angels and Demons - Dan Brown (ஹெலிகாப்டர்ல மேலே போயி பட்டாசு வெடிக்கிறதெல்லாம் கண்டுக்கலைன்னா;) )
 3. மானசரோவர் - அசோகமித்திரன்
 4. எம் தமிழர் எடுத்த திரைப்படம் - தியோடர் பாஸ்கரன்
 5. எப்போதும் பெண் (தலை சுஜாதா எழுதுனது) - அருமையான விஷயம் டைல்யூட் செய்யப்பட்டுவிட்டதாகக் கருதுகிறேன். (ஆனால் எப்போதும் போல, இப்புத்தகத்தின் மூலமான சிமோன் தி புவாவின் The Second Sex படிக்க ஆர்வம் வந்துள்ளது)
 6. ராயர் காபி கிளப் - இரா.முருகன்

படித்தவை... ஆனால் அவ்வளவாக (சுத்தமாக என்றும் சொல்லலாம்) ஒட்டாதவை :
 1. பொன்னியின் செல்வன் - செவ்விலக்கியம் என்றெல்லாம் சொன்னதால் படித்தேன். எனக்கு அப்படி தெரியவில்லை. இதைப் பற்றி என் கருத்துக்களை எழுதி இவனிடமும், இந்த (1 , 2) குழுக்களிடமும் வாங்கி கட்டிக்கொள்ள கொள்ள ஆசை :))
 2. உலக சினிமா (எஸ்.ராமகிருஷ்ணன்) - ஐநூறு ரூபாய்... ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்... இது பற்றி அடுத்து ஒரு கட்டுரை எழுதலாம் என்று எண்ணம்.

இந்த ஆட்டத்தை இவங்களும ஆடினா நல்லாயிருக்கும்:

(இந்த பதிவினை படித்தபின்பு எனக்கு என்னவோ என்னைப் பற்றி ரொம்ப படிப்பாளி ரேஞ்சுக்கு ஒரு இமேஜ் பில்டப் கொடுத்துவிட்டேனோ என்று "எனக்குத்" தோன்றுகிறது. இந்த இடத்தில் ஒன்றே ஒன்றினை நினைத்துப் பார்த்துக்கொள்கின்றேன். எங்கோ படித்த ஞாபகம், ஜெயகாந்தன் சொன்னாராம், "புத்தகம் படிப்பதால் ஒருவன் மேதாவியோ அறிவாளியோ சிந்தனையாளனோ ஆவதில்லை. சொந்தமாகவும், originalஆகவும் எவன் சிந்திக்கின்றானோ அவன் அறிவாளி, அவன் சிந்தனையாளன்". சொந்தமாகவும், originalஆகவும் நான் சிந்திக்கின்றேனா என்று என்னை கேட்டுக்கொள்கின்றேன். பதில் வருவது கொஞ்சம் கடினம் தான். ஆனால் சிரிப்பு வருகிறது)
           சந்தோஷ் குரு @ 6/08/2005 11:21:00 AM | தனிச்சுட்டி| 5 Blogger Comments

5 Comments:

at 2:11 PM, Blogger Kannan said...

நீங்களும் நியு புக்லேண்ட் தானா? நான் கோவை போகும்போது விஜயா பதிப்பகத்தில் வேட்டையாடி, பர்ஸைப் பல்லாங்குழி ஆடுவேன்!

மற்றபடி 400 - 500 க்கே என் மாதிரி ஆட்களிடம் நீங்கள் சீன் காட்டலாம். அவ்வப்போது பி(ப)டித்ததைக் குறித்து எழுதுங்கள்.

 
at 6:52 PM, Blogger -/பெயரிலி. said...

/ஜெயகாந்தன் சொன்னாராம், "புத்தகம் படிப்பதால் ஒருவன் மேதாவியோ அறிவாளியோ சிந்தனையாளனோ ஆவதில்லை. சொந்தமாகவும், originalஆகவும் எவன் சிந்திக்கின்றானோ அவன் அறிவாளி, அவன் சிந்தனையாளன்"./
வள்! வள்!!

பொன்னியின் செல்வன் செவ்விலக்கியமென்று யார் பூச்சுத்தினாங்க?

-/.

 
at 4:13 PM, Blogger Venkat said...

அழைப்புக்கு நன்றி. வேலைப்பளுவின் காரணமாக உடனே எழுத முடியவில்லை. எழுதியவுடன்கூட உடனே இங்கே சொல்ல முடியவில்லை. பார்க்க;

http://www.domesticatedonion.net/blog/?item=521

 
at 4:29 PM, Blogger Santhosh Guru said...

பட்டியலுக்கு நன்றி வெங்கட்.

நான் என்னுடைய பட்டியலில் அவசரத்தில் சில பிடித்த இரு புத்தகங்களை நினைவு கூற மறந்திருக்கிறேன். அதில் ஒன்று அ.முத்துலிங்கம் கதைகள் (என்னை மிகவும் கவர்ந்தது "அக்கா"). அதைப் போலவே உங்கள் குவாண்டம் கணிணி புத்தகத்தையும் அனுபவித்து படித்தேன். குறிப்பாக, மின்புத்தகங்கள் பற்றிய அத்தியாயத்தில் காகித புத்தகங்களை எப்படி படிப்பது :) என்று எழுதியிருப்பீர்கள். அதை மிகவும் ரசித்துப் படித்தேன். (படித்த பின்பு முதல் முறையாக புத்தகத்தை வாசம் வேறு பிடித்தேன் :)) ).

அது போகட்டும், உங்களுடைய பதிவில் இப்போது பரவலாக பயன்படுத்தப்படும் அ-புனைவு என்ற பதத்திற்கு பதிலாக புனைவிலி என்ற பதத்தினை பயன்படுத்தியிருந்தீர்கள். எனக்கு அச்சொல் மிகவும் பிடித்துள்ளது. நீங்களே கோர்த்ததா அல்லது வேறு யாராவது கோர்த்த சொல்லா ?

 
at 4:36 PM, Blogger Santhosh Guru said...

கண்ணன், பெயரிலி, பின்னூட்டத்திற்கு நன்றி.

பெயரிலி : என் நட்புவட்டத்திலும், வலையுலகத்திலும் பொன்னியின் செல்வனை மிகவும் புகழ்ந்து கேட்டிருக்கிறேன். அதவுடுங்க, இத படிச்சு பாருங்க??..ம்ம்ம்ம்.. Perception differs.. வேற என்ன சொல்ல முடியும் ? :))

 

Post a Comment

<< Home

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mailஅடிக்கடி மேய்வது
Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி

பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger