<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Friday, November 26, 2004

Performance Appraisal

(நான்) வேலை பார்க்கும் அலுவலகத்திற்கும் எனது பொறியியல் கல்லூரிக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எங்கள் கல்லூரியில், அஸெஸ்மெண்ட் கமிட்டி ஏதாவது வந்தால் போதும். கல்லூரி ஜொலிக்க ஆரம்பித்துவிடும். புது சுண்ணாம்புப் பூச்சு, மெஸ்ஸில் அறுசுவை நடராஜன் சாப்பாடு என்று அலங்காரமாகிவிடும். அதைப் போலவே, எங்கள் அலுவலகத்தில் வெளிநாட்டு க்ளையண்ட் யாராவது வந்தால் போதும், பூத் பங்களா போல் இருக்கும் எங்களது ஒயிட்ஸ் ரோடு அலுவலகம் அசத்தலாகிவிடும். சிவப்பு கம்பளமென்ன, பூந்தொட்டிகளில் ஒரு வார வாடகைக்கு எடுத்துவந்த அலங்கார செடிகள் என்ன, ஷூ பாலிஷ் போடும் மெஷின் என்ன, எங்களுடைய மேஜைகளுக்கு திடீரென வந்த சுத்தம் தான் என்ன . அப்பப்பா.

அதைப்போல இன்னொன்று தேர்வு. செமஸ்டர் தேர்வு நெருங்கி வந்தால் போதும். அப்போது தான் சிலபஸ் புரட்ட ஆரம்பித்து, எதை படிக்காமல் விடலாம் என்று முதலில் யோசித்து, எதைப் படிக்க வேண்டுமோ அதை படிக்காமல், முன்பே படித்தவனிடம் கொஞ்சம் கதை கேட்டு, தேர்வில் போய் hints develop செய்து மார்க் வாங்கிவிடலாம். இந்த ( 1 , 2 ) இரண்டு பேர்தான் நான் எழுதும் தேர்வுகளின் கதையாசிரியர்கள்.

இந்த தேர்வினைப் போலவே, அலுவலகங்களுக்கு என்ன என்று தேடினால், பொதுவாக டிசம்பர் மாதங்களில் நடக்கும் performance appraisal. டிசம்பர் நெருங்கும் நேரம் வந்தாலே போதும். பிரமோஷன் கிடைக்க/எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எல்லா team leadersக்கும், project leadersக்கும் projectன் மேல், அதில் உள்ள மக்களின் மேல் ஒரு அளவுகடந்த அன்பு வழிய ஆரம்பித்துவிடும். அடிக்கடி மீட்டிங் போட்டு team building என்ற பேரில் கடியை போடுவார்கள். ஊக்கமளக்கிற வகையில் பேசுகிறேன் என்று கூறி தூக்கம் வரவைப்பார்கள் (ஆகா, கவித கொட்ட ஆரம்பிச்சுடுச்சே...த்ஸு..த்ஸு). Projectன் best practices எல்லாம் exhibit செய்ய வேண்டும் என்று சொல்லி மணிக்கணக்கில் மைக்ரோஸாஃப்ட் ஆஃபிஸில் வேலையைக் கொடுப்பார்கள். மற்ற leadersகளிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட பல கிலோபைட் கணக்கில் ப்ரெஸெண்டேஷன்களையும், டாக்குமெண்ட்களையும் அடித்து தள்ளுவார்கள்.

சரி நான் என் மேட்டருக்கு வரேன். இந்த performance appraisal , in spirit ஒரு மிக நல்ல concept. அதை ஒழுங்காக செயல்படுத்தினால், நம்மைப் பற்றி ஒரு நல்ல அகத்தாய்வினையும் செய்ய முடியும், திறமைகளை வளர்த்து சீக்கிரம் முன்னேறவும் முடியும்.

நான் இந்த வருட ஆரம்பத்தில், ஒரு டாக்குமெண்ட்டில் நான் பார்த்த திரைப்படங்கள், நாடகங்கள், படித்த புத்தகங்கள் பற்றி குறிப்பு எடுப்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தேன். ஆக நான் பார்த்த அந்த திரைப்படங்களினைப் பற்றிய ஒரு பார்வைதான் இது. (இதுக்குத் தான் இவ்ளோ பில்டப்பு)

இந்த வருடம், இன்று வரை சரியாக அறுபது திரைப்படங்களினைப் பார்த்திருக்கிறேன். ஒரு திரைப்படத்திற்கு சராசரியாக நாற்பது ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கிட்டத்திட்ட 2500 ரூபாயினை, என் ஒரு மாத சம்பளத்தின் ஏழில் ஒரு பகுதியினை இதற்காகவே செலவு செய்திருக்கிறேன்.

இந்த வருடம் நான் பார்த்ததிலே எனக்கு மிகவும் பிடித்த படங்கள் :






ஒரு ஃப்ரேமாக வெறுத்து வெறுத்து பார்த்த படங்கள்:


சில படங்கள் மற்றவர்கள் சூப்பர் என்றார்கள், ஆனால் என் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை. அவை (Sanjuro , The Guns of Navarone, Monster, Troy, Mary Poppins, ஆட்டோகிராஃப்)

மற்றபடி காசையும் வீணாக்கியோ அல்லது தூக்கத்தை கெடுத்தோ பார்த்தவை (Veer Zaara, Chameli, அருள், M.குமரன், எதிரி, செல்லமே, பேரழகன் Once upon a time in Mexico, Spiderman 2, ......)

இதைப்போல் கண்டமேனிக்கு படம் பார்த்து வைத்திருக்கிறேன் நான். பொதுவாக தீபாவளி வந்தால் இப்படித்தான் கண்டபடி பலகாரம் தின்றுவிட்டு மலங்க மலங்க முழிக்கும் போது, பாட்டி கருப்பு நிறத்தில் குமட்டிக் கொண்டு வரவைக்கும் ஒரு லேகியத்தினை வாயில் திணித்து வயிற்றை சரி செய்வாள்.

அந்த வகையில் கன்னாபின்னாவென படம் பார்த்து வைத்திருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக வெங்கட் சாமிநாதனின் "திரை உலகில்" என்ற லேகியத்தினையும் தின்று விட்டேன். அடுத்த பதிவில் என் வாசிப்பு அனுபவத்தினையும், இந்த performance appraisal மூலம் வந்த முடிவினையும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
           சந்தோஷ் குரு @ 11/26/2004 01:06:00 AM | தனிச்சுட்டி| 6 Blogger Comments

Thursday, November 04, 2004

தந்தை எவ்வவழி......

சமீபத்தில் வெளிவந்து ஹிட் என்று சொல்லப்பட்ட படம் "M. குமரன்". அதில் வரும் பாடல் தான் "சென்னை செந்தமிழ் ... மறந்தேன் உன்னாலே". கேட்டவுடனேயே இது அவ்வளவாக கவரவில்லை. ஆனால் இப்போது பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் எங்கேயோ கேட்டது போலவே தோன்றியது. பிறகுதான் தெரிந்தது தேவாவின் மகன், ஸ்ரீகாந்த் தேவா இசையமத்துள்ளார் என்று. எந்த பாட்டிலிருந்து சுட்டிருக்கிறார் தெரியுமா : "மஹா கணபதிம்... மனஸஸ்மராமி..." . எப்படி பத்திரிக்கைகள் இதை போட்டு கிழிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.
           சந்தோஷ் குரு @ 11/04/2004 08:32:00 PM | தனிச்சுட்டி| 0 Blogger Comments

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mail



அடிக்கடி மேய்வது




Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி





பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger