<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Thursday, September 16, 2004

காந்தி, அண்ணாதுரை, துக்ளக்

சென்ற வாரம் வந்த துக்ளக்கில் ஒரு செய்தி இது. வைகோவுக்கும் , தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா என்பவருக்கும் கடித விவாதம் நடக்கின்றது. சாவர்க்கர், காந்திஜி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்; ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொண்டவர் என்ற வைகோவின் கடிதத்திற்கு பதிலாக ராஜா எழுதியுள்ளார்.

சக பா.ஜ.கவினரைப் போல சாவர்க்கரை defend செய்து பல வாதங்கள் வைத்துள்ளார். ஆனால் என்னைக் கவர்ந்தது காந்தியினைப் பற்றியும், விடுதலைப் போராட்டம் பற்றியும் அண்ணாதுரை சொன்னது தான்.

"..... சாவர்க்கர் காந்திஜியினைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்பது உங்களது குற்றச்சாட்டு. ஒருவருடைய உயிரைக்கொல்வதை, அவரது புகழைக் கொல்வது மிகவும் கொடுமையானது என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். காந்திஜியின் புகழைக் கொன்று அண்ணாதுரை அவர்கள் பேசியதை தங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். 1946ஆம் ஆண்டு காந்திஜி சென்னையில் தங்கியிருந்த பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை தரிசிக்க வந்தனர். அதைப் பார்த்து தாங்கிக் கொள்ளாத அண்ணாதுரை, "காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி" - என்று காந்திஜியினை காமாந்தகராக கூறியவர் அண்ணாதுரை. ஆமாம் அந்த காமந்தகாரர் மீது அண்ணாவின் தம்பியான உங்களுக்கு கரிசனம் எத்தனை நாட்களாக ?

1942ல் காந்திஜி "வெள்ளையனே வெளியேறு" என்று அறை கூவல் விட்டார். "செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள்" என்று மக்களுக்கு கட்டளையிட்டார். அப்போது அண்ணா, என்ன சொன்னார் என்பது தங்களுக்கு நினைவு இருக்கும் : "தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரொப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது" என்றார்.

இதைப் படித்தவுடன் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. "இருவர்" படத்தில் வருவது போன்றது, தமிழக அரசியல் வரலாறு என எண்ணியிருந்தேன். இப்போது புரிகிறது, history is his story. பல முறை ஜெயகாந்தன் ஏன் திராவிட கட்சிகளை வெறுக்கிறார் என வியந்திருக்கிறேன். இப்ப விளங்குது.
           சந்தோஷ் குரு @ 9/16/2004 10:40:00 PM | தனிச்சுட்டி| 5 Blogger Comments

5 Comments:

at 1:14 AM, Blogger Mookku Sundar said...

சந்தோஷ்,

அரசியல்வாதிகள் பேசுவதை வைத்து எந்த முடிவுக்கும் வராதீர்கள். ராஜா, வை.கோ, ஏன் ஜெயகாந்தன் கூட அரசியல்வாதிதான். காந்தியாரையே விமரிசனம் செய்து பல புத்தகங்கள் வந்துள்ளன. அவரையே அரசியல்வாதி என்று சொல்வோரும் உண்டு.

இங்கு யாரும் யோக்கியமில்லை. ...

 
at 1:55 PM, Blogger ராம்கி said...

சந்தோஷ்,

அண்ணா மட்டுமல்ல பெரும்பாலான திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்தும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. எம்.ஜி. ஆர், அந்த அண்ணாவையே தென்னாட்டு காந்தியென்று விளித்து தனி காமெடி டிராக்.
ஆக, துக்ளக்கில் ராஜா சொல்லியிருந்த விஷயம் வெறும் வெட்டிப்பேச்சல்ல... விஷயமுள்ள பேச்சுதான்!

 
at 2:26 PM, Anonymous Anonymous said...

what was RSS doing in 1942 and what was their response to Gandhi when he was alive.Outlook had produced evidence from National Archives to show that Savarkar knew about the intentions of Godse and helped. If you read only Thuglak you will know only what Cho wants you
to know.Periyar and Anna were critical of Gandhi, but as S.V.Rajadurai pointed out in a recent issue of Kalachivadu they never plotted to murder him nor celebarated his assasination with distributing sweets.This is what Savarkar and Co did.

 
at 11:11 PM, Blogger Santhosh Guru said...

சுந்தர் (மூக்கரே), காந்தியினை அரசியல்வாதி என்று சொல்வதில் தவறில்லை. தற்போது உள்ள (பெரும்பாலான) அரசியல்வாதிகள், தங்கள் பெயரையும், அரசியல் என்ற பெயரினையே கெடுத்துவிட்டதால், உங்களுக்கு "காந்தி ஒரு அரசியல்வாதி" என்று சொல்வது பிடிக்க வில்லை என நினைக்கிறேன்.

ராம்கி, நீங்கள் கூறியது நான் அறியாத செய்தி. உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளைப் போல, திரவிடக் கட்சிகளும் முரண்பாடுகள் மிக்க கட்சிகள் போல !!!.

திரு.anonymous, I have not yet read the Outlook article and Kalachuvadu article. Will be great if you can give me the link. (As you had mentioned about Cho, there is an interesting article by Mr.Hari Krishnan on Cho. It shows the other side of the critic)

 
at 6:05 AM, Blogger சொம்புநக்கி said...

சார் நீங்க உண்மையிலேயே துக்ளக் படிக்கிறீங்களா? பார்ப்பன ஜாதியைத் தவிர மற்ற எல்லாரையும் திட்டி இருப்பார் சோ ராமசாமி.

 

Post a Comment

<< Home

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mail



அடிக்கடி மேய்வது




Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி





பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger