<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Wednesday, August 18, 2004

அன்பே கம்யூனிஸம் : வலைப்பூ

இரண்டு நாட்கள் முன்பு சென்னையில் நடந்த லேண்ட்மார்க் வினாடி-வினாவில் கேட்கப்பட்ட கேள்வி இது. இந்த இரு படங்களுக்கிடையே உள்ள தொடர்பு என்ன.

JoinFinal.gif


வலதுபக்கத்தில் இருக்கும் ஓவியம் அன்பே சிவம் படத்தில் வரும் ஒரு ஒவியம் இது. மிக அருமையாக யோசித்து வரையப்பட்டது. திரைப்படத்தில் இதனுடைய உள்ளர்த்தத்தினை அறிந்தபோது ஆ என்று வாய் பிளந்தேன். ஆனால் லேண்ட்மார்க் வினாடி-வினா போட்டியில் ஒரு மிகவும் சுவாரஸ்யமான செய்தியினை அறிந்தேன்.



வலது பக்கம் உள்ள ((கருப்பு-வெள்ளை) ஓவியத்தினை வரைந்தது டீகோ ரிவேரா என்ற மெக்ஸிக்க கலைஞர்.


Riveria.jpg


இவர் கம்யூனிஸத்தின் மீது பற்று கொண்டவர். ராக்கஃபெல்லர் தன்னுடைய கட்டடம் ஒன்றுக்கு இவரை வரையக்கூப்பிட்டுள்ளார். இவர் தன் கை வண்ணத்தை காட்டியுள்ளார். இந்த ஓவியத்தில் (கருப்பு வெள்ளைப் படம்), லெனினின் முகம் பூடகமாக இல்லாமல் வெளிப்படையாகவே உள்ளது. இதைக் கண்டுபிடித்து விட்ட ராக்கஃபெல்லர், இந்த ஓவியத்தினை சிதைத்துவிட்டார். ஆனால் ரிவேராவோ இதை வேறு இடத்தில் , வேறு பெயரில் வரைந்தார் (கீழே உள்ள வண்ணப்படம்). இந்த ஓவியத்தில் லெனினின் வலக்கைப்பக்கம் இருப்பது லியான் ட்ராட்ஸ்கி.


Commie.JPG
lenin_color.jpg



அன்பே சிவத்தில் வரும் ஓவியம் இதைப்பார்த்து inspire ஆனதா, இல்லை co-incidence ஆ என்றெல்லாம் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் அன்பே சிவத்தில் வரும் அந்த ஒவியத்தில் கதைக்கேற்றார் போல், பூடகமாக வரைய யோசனையை எந்த மூளை கொடுத்ததோ அதற்கு ஒரு ஷொட்டு (பிரளயனா, கமலா, மதனா, வேறு யார் வேண்டுமானாலும் இருக்கலாம்) . ரிவேராவின் ஓவியத்தினைப் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

ஆக பதிவின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான விடை : இரு ஓவியங்களுக்கான தொடர்பு கம்யூனிஸம்.

-- நன்றி : வலைப்பூ
           சந்தோஷ் குரு @ 8/18/2004 09:36:00 PM | தனிச்சுட்டி| 3 Blogger Comments

3 Comments:

at 11:59 PM, Blogger -/பெயரிலி. said...

Tim Robbins' "Cradle Will Rock" film shows this painting incident (humorously)

 
at 7:12 PM, Blogger Boston Bala said...

Where did you get the painting of Anbe Sivam? I like to see a magnified version. Thanks in advance

 
at 10:47 PM, Blogger Santhosh Guru said...

கடந்த வாரம் தில்லியில் ஒரு சுற்றுலாவிற்காக சென்றிருந்தேன். அங்கே நேருவின், புத்தக அறையில், டீகோ ரிவேராவினைப் பற்றிய ஒரு புத்தகத்தினை வைத்திருந்தார்கள். பெயரிலி, நீங்கள் சுட்டி கொடுத்திருக்கும் திரைப்படத்தினை பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.

பாலா, நான் அன்பே சிவம் திரைப்படத்தின் MPG ல் இருந்து ஒரு frame extract செய்தேன். யாரோ ஒரு நண்பர் வழியாக அந்தப் திரைப்படம் எனக்கு கிடைத்தது. உங்களுக்கு வேண்டும் என்றால் அந்த sequence (2 or 3 minutes) அதை வெட்டி, யாஹூ ப்ரீஃப்கேஸில் ஷேர் செய்து வைக்கிறேன். சொல்லவும்.

 

Post a Comment

<< Home

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mail



அடிக்கடி மேய்வது




Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி





பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger