<xmp><body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6886596\x26blogName\x3d%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://santhoshguru.blogspot.com/search\x26blogLocale\x3den_IN\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://santhoshguru.blogspot.com/\x26vt\x3d-1173546591900635210', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script></xmp>

கசாகூளம் - பெயர்க்காரணம்

Saturday, May 29, 2004

பயாஸ்கோப்

நீங்கள் சென்னையில் இருப்பவரா, classic (ஜெயமோகன் பாணியில் சொன்னால், செவ்வியலாக்கம்) திரைப்படங்களை மிகவும் விரும்புவரா, என்னைப்போல சத்யம் தியேட்டரில் மாதம் ரூ.500 செலவு செய்துவிட்டு அடுத்த மாதம் தேவையில்லாமல் 500 செலவு செய்துவிட்டோமே என்று புலம்புபவரா (கடைசி சாய்ஸ் optional - the last option is optional.. ச்சோ ச்சோ...இங்கிலீஸ் , கவிதை கவிதை). ஆமாம் என்றால், நீங்கள் இந்த இடத்தைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

சென்னை மயிலையில் இருக்கிறது இந்த இடம். அஷ்விதா கலைக்காட்சியகம் (Ashvita Art Gallery) . சென்னையில் உள்ள திரைப்பட ரசிகர்களின், கலை ரசனையினை மேம்படுத்த, விரிவாக்க, இக்கூடத்தில் வாரம் ஒரு முறை, ஒரு நல்ல படைப்பினை திரையிடுகிறார்கள் (ஏசி அறையில் ஓசியாக...ஆகா..இன்னொரு கவிதை). அனைத்து மொழி படைப்புகளையும் திரையிடுகிறார்கள். சமீபத்தில் வறுமையின் நிறம் சிவப்பு, The Pianist, Raging Bull, The Messenger , The Insider போன்ற படங்களை அங்கே நான் பார்த்தேன். Amores Perros ஐ எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

இருபது அல்லது இருபத்திஐந்து பேர் அமரக்கூடிய அளவில் ஒரு சிறிய ஹால், நல்ல டிவிடி பிளேயர் மற்றும் தரமான ஒலியமைப்புடன், அமைதியாக இராதகிருஷ்ணன் சாலையின் ஒரு மூலையில் இருக்கிறது. ஒரு சிறிய குளம்பியகமும் (அதான்பா தமிழ்ல சொன்னா காபி கடை..ஆனால் அது ஓசியில்லை:(( ) உண்டு. கூட்டம் வெகுவும் குறைவு, நான் அதிகபட்சமாக பத்துபேரை பார்த்திருக்கிறேன். யாருக்கும் இதைப்பற்றி அதிகமாக தெரியவில்லைபோலும். பிரதி வாரம், புதன் கிழமை, 6:45PM நேரத்தில் இங்கு திரையிடுகின்றனர்.
அடுத்த வாரங்களில் திரையிடப்படும் படைப்புகள்:

இதன் முகவரி:
Ashvita Arts and Cultural foundation,
11, 2nd Street,
Dr.Radhakrishnan Saalai, Mylapore.(Phone : 28476063 or 52109990)
(பிரெசிடன்சி ஹோட்டலுக்கும் 'Be' என்ற ஆடையகத்தின் மத்தியில் உள்ள சந்தில், இருக்கிறது. நியான் விளக்கில் 'The Cafe' என்ற சின்னமும் அங்கு இருக்கும் )
           சந்தோஷ் குரு @ 5/29/2004 09:52:00 PM | தனிச்சுட்டி| 0 Blogger Comments

Wednesday, May 26, 2004

கோழி கிறுக்கல் , சே..சே , எலி கிறுக்கல்.

IITB கல்லூரியின் பேராசிரியர் சடகோபன் , தற்போது வெளிநாட்டவர் இந்தியாவினை பார்க்கும் பார்வையினைப் பற்றி கூறும்போது 'we are re-positioned from a country of snake charmers to one of mouse charmers' என்று வலைப்பதிந்துள்ளார் . அந்த வரிசையில் 'அடோபி போட்டோஷாப்' கொண்டு நான் செய்த எலி கிறுக்கல்கள்.

என் அலுவலக நண்பன் , treat ஒன்றினைத்தராமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்தான். அவனிடம் நச்சரிக்க உதவியாக இருக்குமென்று

கிறுக்கியது.

NewGuru

இது என் நண்பர்களோடு ஊட்டி சுற்றுலாவில் எடுத்தது. 'தையா தையா' பாட்டு படம்பிடித்த இடம் அருகே நாங்கள் உலாத்திக்கொண்டிருந்த போது, மணிரத்னம், ஆய்த எழுத்து ஞாபகம் வந்து, கிளிக்கியது.(இப்படத்தில் நானில்லை)

Done

           சந்தோஷ் குரு @ 5/26/2004 09:52:00 PM | தனிச்சுட்டி| 0 Blogger Comments

Wednesday, May 19, 2004

வலையுலா !!!

இந்த வாரம் 'Pentium கணிணியாம்பாள் சமேத Dial-up நெட்ராஜரின்' புண்ணியத்தில் திவ்யமான வலையுலா வரமுடிந்தது.
1. மரபிலக்கியம் வலைப்பதிவில் கவிஞர் ஹரிகிருஷ்ணன் , கம்பராமயணம் பற்றி அருமையாக எழுதிவருகிறார்.அபாரத்திறனாய்வும் , கருத்தாழமும் உடைய பதிவு இது. ராயரில் ஒருமுறை பாரதியின் புகைப்பழக்கம் பற்றிக்கேட்டு இவரிடம் தான் குட்டுப்பேற்றேன், சரியான குட்டு .
2. சித்ரன் வலைப்பதிவு சுவாரஸ்யமானது. சிற்பம் போல செதுக்கப்பட்ட வார்த்தைகள், தெளிந்த ஒட்டம்.
3. நக்கீரனின் (மீசைக்காரரின் பத்திரிக்கை அல்ல) இணைய இதழ்களுக்கான ஒரு directory
4.மரத்தடியில் ஞானி (தீம்தரிகிட) கேள்வி பதில்கள்


           சந்தோஷ் குரு @ 5/19/2004 11:40:00 PM | தனிச்சுட்டி| 0 Blogger Comments

மவுண்ட் ரோட் மகாவிஷ்ணு

ஹிண்டு பத்திரிக்கைக்கு என்ன ஆயிற்று ?. சோனியாவை தலையில் தூக்கிவைத்து ஆடுகிறார்கள். கடும் உழைப்பால் கிடைத்த வெற்றியினை தியாகம் செய்த மகாத்மா என்றேல்லாம் புகழ்கிறார்கள். நான் ஒரு சோனியா basher ம் இல்லை, சங்பரிவாரின் ஆதரவாளனும் இல்லை. Letters to the editor பகுதிக்கு இதுவரை எழுதியது இல்லை , ஆனால் இம்முறை பொறுக்கவில்லை. அதனால் ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டுருக்கிறேன், அதன் ஒரு நகல் இங்கே,

Sir,

This is with respect to your editorial, “Stunning Political Sacrifice".
Is there a plan at The Hindu office to re-brand your newspaper from "India's National Newspaper Since 1878” to "India National Congress' Newspaper"?
Your opinion seemed very unfair and it was very biased.
I don't know on what rationale you termed this act of Sonia as sacrifice.

For now there can be an ulterior motive or long term plan, may be she wants to gain the sympathy from the public and reserve it for the next opportunity.

This can also be viewed in a different perspective. The sour grape one. Ms.Gandhi might have given forethought about the rigmarole of PM post, might have come to the conclusion that it is not her cup of tea and accepted the truth in a gracious manner. This obviously cannot be termed as sacrifice.

I dont perceive the echelons of The Hindu as too credulous people, who can identify the likes of Govindhacharyas as menacing but not able to read between the lines of Ms.Gandhi.

Truly,
Santhosh
<என் முகவரி>
           சந்தோஷ் குரு @ 5/19/2004 11:29:00 PM | தனிச்சுட்டி| 0 Blogger Comments

Wednesday, May 05, 2004

துலுக்கரும் , சக்தி விகடனும்

பொறியியல் கல்லூரிகளில் , இறுதியாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே மிக பிரபலமான சமாச்சாரம், Wordlist. எங்கள் கல்லூரியில், அனைவரும் Texas Austin, UIUC, Caltech போன்ற பல்கலைகழகங்கள் பற்றி கனவு கண்டுகொண்டு இருப்பார்கள். (MIT, Stanford, Cornell போன்றவைப்பற்றி மூச்.. நாங்க படிச்சது சண்முகா கல்லூரி.. எங்க ரேஞ்சே தனி).

நானும் அந்த கும்பலில் இருந்தேன். அப்போது வந்த பழக்கம் தான் இந்த Words and etymology (சொல்மூலம் ???) பைத்தியம். சரி விஷயத்துக்கு வருவோம்.

துலுக்கர் , துலுக்க சாமந்தி போன்ற சொற்களை கேட்கும்போது, ஏன் துலுக்கர் , என்ன காரணம் என்று சிறுவயதில் கேள்விகள் வரும். இந்த வார சக்தி விகடனை புரட்டியபோது விடை கிடைத்தது.

இஸ்லாம் மதத்தினை பழகும் மக்களை , துருக்கியில் இருந்து வந்தவர்களின் descendants என்று மக்கள் கருதினார்கள். அவர்களை துருக்கியர்கள் என்று விளிக்கத்தொடங்கி, துருக்கியர், துருக்கர், துலுக்கர் என்று மருவி, இப்போது துலுக்கன் என்று மரியாதையாக (??) அழைத்து வருகிறோம். இன்றும் கூட ஹைதராபாத் போன்ற இடங்களில் முஸ்லீம் மக்களை 'துருக்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது

நான் சக்தி விகடன், குமுதம் பக்தி, ஆலயம் போன்ற இதழ்களை வெறுப்பவன். இவை ஆன்மீகத்தினை வளர்க்காமல் Pop-spiritualism வளர்ப்பதாக எனக்கு தோன்றுகிறது (Spiritualism not in its spirit ???). இருந்தாலும் சில சமயம் (மிக சில என்று கொள்ளவும்), நல்ல செய்திகளை தப்பித்தவறி தந்துவிடுகின்றன.

           சந்தோஷ் குரு @ 5/05/2004 02:40:00 PM | தனிச்சுட்டி|

Monday, May 03, 2004

பிள்ளையார் சுழி

நானும் வலைபதிய வேண்டும் என்று முயற்சிக்கிறேன்... முடியவில்லை. சோம்பேறித்தனம், வேலைப்பளு, யார் படிக்கப்போகிறார்கள் என்ற எண்ணம் போன்றவைத்தான் காரணங்களாக இருக்கமுடியும். ஆனால் வலைப்பதிவினை படிப்பது என்பது ஒரு பழக்கமாக போய்விட்டது.தினமும், நாளிதழ்களை படிப்பது போல் இதுவும் ஒரு பழக்கமாகி விட்டது. ஆனால் இப்போது வலைப்பதிய தூண்டிய சில காரணங்கள்:

1. தமிழில் எழுதுவது மறந்துவிடுமோ (அல்லது வராதோ) என்ற பயம்.
2. Peer Pressure (சுற்றுசூழலின் அழுத்தம் !!!???)
3. வெங்கட் சமீபத்தில் கொடுத்த சுளுக்கடி (முக்கிய காரணம்)

வெங்கட் சொல்லியதுபோல என் துறை பற்றிய செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆவல். ஆனால் நான் சொல்லவேண்டியதை எளிமையாகவும், தெளிவாகவும் என்னால் இப்போது எழுத முடியுமா என்பது சந்தேகமே. எனவே சில நாட்கள் , எனக்கு பரிச்சியமான உலகமகா முக்கியமான சில துறைகளைப் (ரேடியோ, இசை, சினிமா, சென்னை, எனைய பிற) பற்றி எழுதலாமேன்று உத்தேசம்.

ஆங்கிலத்தில் Blog என்று பேத்திக்கொண்டிருந்த என்னை தமிழிலும் எழுதலாமே என்ற விதையினை தூவிய பத்ரி அவர்களுக்கும், பொளேர் என்று தன் கருத்தினால் என்னை அறைந்த வெங்கட் அவர்களுக்கும் என் நன்றி.

(அப்பாடா இந்த பத்தியை தட்டச்சுவதற்கு மட்டும் எனக்கு 30 நிமிடங்கள் ஆனது!!!)
           சந்தோஷ் குரு @ 5/03/2004 07:31:00 PM | தனிச்சுட்டி|

If you are not able to view this site , don't worry, you are not missing anything great. This contains my ramblings in , Thamizh (Tamil) , thats it.

My Profile | My Mailஅடிக்கடி மேய்வது
Mitran Foundation

Jambav - software for children with special needs


தமிழ் விக்சனரி

பரணை

நன்றி

தமிழ்மணம்
Blogger